Admin-message ஊழல்கள், சுரண்டல்கள், சமூகத்துரோகங்களை மக்கள் நலன்கருதி துணிவுடன் வெளிச்சமிடக் காத்திருக்கும் நமது திங்கள்.கொம் உடன் இணைந்துருங்கள். Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

சரிந்து விழும் நிலையில் மோசூல் அணைக்கட்டு இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Written By We Are Anonymous on Monday, February 29, 2016 | February 29, 2016



ஈராக்கின் பாரிய அணைக்கட்டுக்களில் ஒன்றான மோசூல் அணைக்கட்டு சரிந்து விழும் அபாயம் உள்ளதாக ஈராக்கிய அரசாங்கம் மற்றும் அங்குள்ள அமெரிகத் தூதரகம் என்பன தனித்தனியாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

தைகிறீஸ் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மோசூல் அணைக்கட்டு சரிந்து விழும் அபாயம் உள்ளதன் காரணமாக அப்பகுதியின் ஆற்றங்கரையருகே வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அந்த எச்சரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று மாலை ஈராக்கிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குறித்த ஆற்றங்கரையருகே வசிக்கும் மக்கள், அதிலிருந்து குறைந்தது 6 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறித்த அணை சரிந்து விழும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. ஆயினும் இது எப்போது நிகழும் என்பது தொடர்பில் துல்லியமான தகவலை எம்மால் தெரிவிக்க முடியாது. எனவே, முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசூல் அணையானது வட ஈராக்கிய நகரமான மோசூலில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
Share this article :




முக்கிய குறிப்பு: திங்கள் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு திங்கள் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை thinkalnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2017. TamilUnionNews. - All Rights Reserved
Designed by Mohamed Hasni